
நான் விழிக்கும் அதிகாலைகளில்
என்னோடு நீயும் விழிப்பாய்
நான் சமைக்கும் பொழுதுகளில்
என்னோடு நீயும் சமைப்பாய்
நான் அலுவலகம் புறப்படும் அவசரத்திலேயிருக்க
நான் குளித்துவிட்டு வருமுன்
எனக்காக என்னுடை தேய்த்து வைப்பாய்
என்னுடைக்கேற்ற அலங்கார பொருட்கள்
என் மதிய உணவு, கைப்பை முதலெடுத்து வைப்பாய்
நீ பணிக்கு கிளம்பும் அவசரத்திலும்
என்னை பேருந்து நிலையத்தில் விட்டுவிட்டு
அதனால் தொடர்ந்த உன் அண்ணனின்
திட்டினை அலட்சியப்படுத்தினாய்
மதிய உணவு வேளையில் நீ பாசமாய்
எடுத்து வைத்த வெஜிடபிள் சாலட்டையும்
புதுவிதமாய் செய்த கோவக்காய் வறுவலையும்
நான் சாப்பிட்டேனா என்றறிய அழைப்பாய்
மாலையில் அலுவலகம் விட்டு வரும்பொழுது
பேருந்து நிறுத்தத்தில் எனக்காக காத்திருந்து
வீட்டிற்கு போவதற்குள் எனக்கு பசிக்குமென்று
எனக்கு பிடித்த பழச்சாறு வாங்கி தந்தாய்
இரவு உணவு என்னோடு சமைத்து
துணிமணிகள் துவைத்து உலர்த்த உதவினாய்
இரவு தூங்கும் முன் பணிச்சுமையால்
களைத்திருந்த எனக்கு தலைக்கோதி
கால் பிடித்து, தைலம் தேய்த்து உன்
கரத்தில், உன் அணைப்பில் தூங்க வைப்பாய்
என்னை ஒரு குழந்தையாக பாவித்து
எனக்கு தாயாக நீ இருப்பாய்
இவையணைத்தும் நான் கேட்காமலே
எனக்கு நீ தந்தாயன்று….
ஆனால் நான் மன்றாடி கேட்டும்
என்னை மறக்க துணிந்தாயின்று…
என் மேல் உன் அண்ணன் சொன்ன
அவதூறுகளை நூறு சதவிகிதம் அவதூறெனத்தெரிந்தும்
எப்படி வெறுக்கமுடிந்ததுன்னாலென்னை?
மறக்கமுடியா உன் இன்ப நினைவுகளோடு…