Monday, October 6, 2008

வாழ்த்துகிறேன்...

அன்பிற்கினிய நண்பனே
ஆருயின் தோழனே
இன்று பிறந்தநாள் காணும்
ஈகை குணம் கொண்டவனே
உன் பணிகளில் சிறந்திடவும்
ஊக்கமுடன் நன்மை பல செய்திடவும்
என்றும் பெரியோர்களின் ஆசியுடனும்
ஏற்றம் நிறைந்த வாழ்வினையும்
ஒரு சேரப்பெற்று
ஓங்கி உயர்ந்த பனைப்போல
ஔடதங்கள் தேவையற்ற வாழ்வில்
அஃதே நலமென வாழ இறைவனை வேண்டி
வாழ்த்துகிறேன் உன் அன்பு தோழி...

ஓசையினூடே நிசப்தம்....

ஏழாவது மாடியில் இருக்கும்
என் அலுவலக ஜன்னல் வழியே
சென்னையின் உயர்ந்த கட்டிடங்கள்
அருகில் இருக்கும் பள்ளியில் விளையாடும்
பிள்ளைகளின் இன்பக் கூச்சல்
ரம்மியமாக என்னை தழுவிச்செல்லும் தென்றல்
கூடு திரும்பும் பறவைகள்
இத்தனை கட்டிடங்களுக்கிடையிலும்
ஆங்காங்கே பச்சைப்சேல் மரங்கள்
மின்சாரம் இல்லாததால் ஆஸ்பத்திரியின்
ஜெனரேட்டரின் இரைச்சல்
தூரத்தில் தெரியும் சாலை
க்கீங் ஹாரன் சத்ததுடன் வாகனங்கள்
பள்ளிக்கும் அலுவலகத்திற்கும் நடுவே குப்பத்தில்
சுறுசுறுப்பாய் வேலைப்பார்க்கும் மனிதர்கள்
இத்தனை சத்தங்கள் இருந்தும் ஏனோ
என் மனம் மட்டும் நிசப்தமாய்…

நானும் வருகிறேன்...


ஏ அன்னமே!!
என் மேலுனக்கு அவ்வளவு கோபமா???
எங்கே போகிறாய் தனியே
நில்! நானும் வருகிறேன்
பார் மேகம் கூட உணர்த்துகிறது
கோபத்தினால் சிவந்த உன்னை…
தணிக்க வரும் குளிர் மேகமாய் நானென்று








Saturday, October 4, 2008

தோழிக்கான ஒரு கவிதை - கோகுலன் கண்ணா












நிலவு தாழ்வாயிருந்த அப்பூங்காவில்
குழந்தையின் கண்கள் ஏந்தி
நீ நட்சத்திரங்கள் பொறுக்கச்சென்றாய்

பூக்களுடன் கதைகள் கதைத்தபடியே
நட்சத்திரங்கள் சிதறிவிழும் கைக்கூடையுடன்
நீ திரும்பும் தருணம்தான் அது நிகழ்ந்தது

தூரமாய் தலைவிரித்தாடிக்கொண்டிருந்த
சில தீ நாக்குகள் கக்கிய வெம்மையில்
பிரசவித்த சில பாம்புக்குட்டிகள்
உன் கால்களை சுற்றின

ஆவென அலறி நீ நிலைகுலைந்த தருணம்
தாங்கிப்பிடிக்க எத்தனிப்பின்றி
முகம் திருப்பிக்கொண்டனர்
அங்கு சுயம் விற்றுக்கொண்டிருந்த சிலர்

வழியோரத்தின் சகபயணியாய்
நலம்கேட்டு நட்புக்கரம் நீட்டினேன்
என் தோட்டத்து பூக்களுக்காய்
வர்ணம் சேகரித்துக்கொண்டிருந்த நான்.

உன் சிணுங்கல்களின் சாபத்தில்
பாம்புகள் அனைத்தும் சாம்பலாகிப்போக
உன்மேல் பூக்களாய் கொட்டின
நீ பொறுக்கிய விண்மீன்கள்

உதடுகளின் புன்னகையுடனும்
கண்களின் குவிந்த கள்ளமற்ற நட்புடனும்
மீண்டும் முட்டியிட்டு
நட்சத்திரம் பொறுக்குகினோம் இருவரும்!

Again there started the shower..... Gokulan Kanna


She went to the garden where the Moon is lower
Sharing fairy tales with smiling face of flower

Having picked some rainbows she filled her basket
Collected shining stars and dumped her pocket
And all her way, the colours of rainbow and stars
Leaked make the heavenly trails

The snow cheered lying on her doorstep
The sun dwelled on her wrist
And, even the rain dropped by her on its thirst,
Though, none there on real to stop the tails of snakes
That creeped on the legs and made her slip
By the sideways the people selling their ownselves
Offered not a hand to hold her up.

Then I, a passer by on my way
Collecting colors for the butterflies of my garden
Pleased to give her one,
And then her earth got the orbit back!

The tails of snakes got ashed by the curses of her weep
Well, that is the blessing Of heaven she did always keep
Again, hoisted the smile on lips, heaps of love on eyes,
She kneeled down and started picking stars!
Now again there started the shower from where it stopped