Tuesday, August 20, 2013

வரமா? சாபமா?


பெண்ணாக பிறப்பது

வரம்தான் எனயெண்ணி

மகிழ்வாய் வலம் வந்தால்

ஒருசில ஆண்கள்

நட்புத்தோல் போர்த்தி

ஆனந்தத்திற்கு கல்லறை

கட்டி சாபமாக

மாற்றிவிடுகிறீர்களே ஏன்?



அவளுக்கென்று மனமில்லையா?

அவள் மனதின் எண்ண

அலைகளை எப்போது

புரிந்துக்கொள்ள

பிரயத்தனமெடுப்பாய் நீ?



வாழ்வில் ஏதோ ஒரு

தருணத்தில் அமைதியற்று

ஆறுதல் தேடியலையும்

பெண்ணை நீ

புரிந்துக்கொள்ளாவிடினும்

பரவாயில்லை

புரிந்துக்கொண்டேன்,

உன் வாழ்வில் ஆறுதலாகவும்

துணையாகவுமிருப்பேன் -

நல்ல தோழனாக!

ஆனால் பதிலுக்கு என்

உணர்வுகளுக்கு

வடிக்காலாய்

நீயிரு என

கேட்காமலாவது இரு..

தோழன் என்ற

தோலைப் போர்த்திக்கொண்டு

திரியும் காமுகனாக

இருக்காதே....

Wednesday, February 13, 2013

அன்பு ரோஷனுக்காக...






உனக்கு பதினோரு வயசு உருவம்
இரண்டு வயசு மனசு..

பொய் தெரியாது...
ஆனால் ஏமாற்ற தெரியும்...
நீ ஏமாற்றும் பொழுதுகள்
எனை சிரிக்க வைக்கும்...

உன் மழலை பேச்சில்
எனை மறக்க வைத்தாய்...
நீ கூப்பிடும் தித்திக்காக
ஏங்கி நிற்கும் மனது...

உன் வீடு வந்த என்னை
என் வீடு செல்ல அனுமதிக்காத
உன் அன்பு பிடிக்கும்...

யாரோடும் அலைப்பேசியில்
பேசாத நீ என் குரல் கேட்டு
சிரிக்கும் சிரிப்பு பிடிக்கும்...

உன் மழலை குரலில் நீ
சொல்லும் ஹாய் தங்கம்
என் மனதை உருக்கும்...

உனக்கு பிடித்த உணவையும்
நீ எனக்கு ஊட்டும் பொழுது
என் மனது குழந்தையாக
மாறிடுமே...

போகாதே என வாய் திறந்து
சொல்ல தெரியாத நீ
என் கைப்பை ஒழித்து வைத்து
உன் விருப்பம் சொல்லும்
விதம் ரசிப்பேன்...

அதையும் மீறி நான்
கிளம்பிவிட்டால் நான் முன்னறைக்கு
வரும் முன் என் செருப்பினை
நீ ஒழித்து வைக்கும் பொழுதுகளில்
என் மனம் உருகி ஓடுமே...

நீ காட்டும் இந்த அன்புக்கு
நான் என்ன தர முடியும்
என் குட்டி தங்கமே..

போலியான அன்பு நிறைந்த
இந்த உலகில்
இது நான் வாழும் பூமி
என்றே அறியாத உன் அன்பு
பலக்கோடி பணம் தராத
நிம்மதி தரும்....

உன் வாழ்நாள் முழுதுமே
குழந்தையாகவே இருக்கும்படி
படைத்த இறைவனுக்கு
கோடி நன்றிகள்...

இந்த பாழாய் போன
சுயநலமிக்க உலகில்
ஏதும் உணராக் குழந்தையாகவே 
நீ இருப்பதில் எனக்கு மகிழ்ச்சியே 

உன் அன்புக்காகவே என்றும் 
உனக்காகவே இருப்பேன் 
என் வாழ்நாள் எல்லாம்....

ஐ லவ் யூ ரோஷன் தங்கம்...