Wednesday, July 1, 2009

என்னுள்ளே என்னுள்ளே....
1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது?

மரியா என்பது அன்னை மரியாவின் பெயர்... மெர்லின் என்பது.... அர்த்தம் எனக்கு தெரியவில்லை... (யாரச்சும் தெரிஞ்சா சொல்லுங்க) எனக்கு அந்த பேரு வச்சது ஒரு குருவானவர்... ஒரு வேளை அவர் அந்த காலத்தின் முன்னனி நடிகை மெர்லின் மன்றோவை நினைத்து வைத்திருக்கலாம்... :) :) வித்யா - எங்க வீட்டுல எல்லாருக்கும் ஆங்கில எழுத்து 'வி' யில் தான் பெயர்.. வினோத், வசந்த்... அதனால் எனக்கு வித்யா...

நட்சத்திரா - எனக்கு நட்சத்திரங்கள் மேல கொஞ்சம் அதிகமாவே காதலுண்டு...

உங்களுக்கு இந்தப் பெயர் பிடிக்குமா?

என்னோட எல்லா பெயருமே எனக்கு ரொம்பவே பிடிக்கும்...


2. கடைசியாக அழுதது எப்பொழுது?

பொதுவா எனக்கு அழுறது பிடிக்காது....

முடிந்த வரை சின்னதா ஆரம்பிச்சு பெரிய புன்னகையில் சமாளிப்பேன்... :)

மனதுக்கு பிரியமானவர்களின் பிரிவு அழ வைக்கும்...அப்படி யாரையும் சமீபத்தில் இழக்கவில்லை...:) :)

3. உங்களுடைய கையெழுத்து உங்களுக்குப் பிடிக்குமா?

ரொம்பவே பிடிக்கும்.... தமிழ் கையெழுத்தை விட ஆங்கில கையெழுத்து அழகாயிருக்கும்...

4. பிடித்த மதிய உணவு என்ன?

பருப்பு சாதம், உருளைக்கிழங்கு வறுவல், அவியல், நான் சமைக்கும் சிக்கன், அப்புறம் அப்பளம்....

5. நீங்கள் பார்த்தவுடன் யாருடனாவது உடனே நட்புக் கொண்டாடக் கூடியவரா?

பார்த்தவுடன் நட்பு...இல்லை... ஆனால் ஒரு சிலருடன் கொஞ்சம் பேசினாலும் மனதில் ஒரு நம்பிக்கை வரும்... அப்படிப்பட்டவர்களுடன் நட்பை தொடருவேன்... எந்த காரணத்துக்காகவும் அவர்களை என் வாழ்நாளில் இழக்க மாட்டேன்...

6. கடலில் குளிக்கப் பிடிக்குமா? அருவியில் குளிக்கப் பிடிக்குமா?

பொதுவாவே தண்ணிரைப்பார்த்தாலே மனசுக்கு சந்தோஷம் வந்திரும்... நீச்சல் தெரியாது அதனால் கடலில் கால் நனைக்கப்பிடிக்கும்..அருவியில் முழுதும் நனையப்பிடிக்கும்... மேலிருந்து விழும் தண்ணீர் நம் தலைத்தொடுமுன் ஒரு புத்துணர்ச்சி வந்திருமே.... அந்த சுகத்துக்கு ஈடு இணையேது???

7. முதலில் ஒருவரைப் பார்க்கும்போது எதனைக் கவனிப்பீர்கள்?

கண்களைத்தான்....கண்கள் சொல்லும் ஒருவரின் மனதின் உண்மையான எண்ண ஓட்டத்தினை...
அப்புறம் கை மற்றும் கால் நகங்கள்... அவை உடலின் சுத்ததினை பிரதிபலிக்கும்...


8. உங்களிடம் உங்களுக்குப் பிடித்த விடயம் என்ன? பிடிக்காத விடயம் என்ன?

பிடித்தது - எப்போதும் புன்னகையுடன் இருப்பது.... யாரையும் எந்த காரணத்திற்காகவும் காயப்படுத்தாமலிருப்பது... வெறுக்கத்தெரியாத மனது.... என்னுடைய சிரிப்பும், குரலும்...

பிடிக்காதது - ரொம்ப சீக்கிரம் காயப்பட்டுக்குவேன்.... பல நேரங்களில் அதற்கு காரணம் நானாகவேயிருப்பேன்... பிரியமானவர்களிடம் சொல்லி பொலம்புவது....

9. உங்கள் பாதியிடம் உங்களுக்குப் பிடித்த, பிடிக்காத விடயங்கள் என்ன?

இன்னும் அப்படி யாரும் வரலை... வந்தபிறகு சொல்லுறேன்....

10. யார் பக்கத்தில் இல்லாமல் இருப்பதற்காக வருந்துகிறீர்கள்?

என் அம்மாவின் மாமா... என் அருமை தாத்தா... தைரியத்தையும் துணிச்சலையும் பணிவையும், அனைவரையும் அன்பு செய்யும் மனதையும் அவங்கிட்டத்தான் கத்துக்கிட்டேன்....

11. இதை எழுதும்போது என்ன வண்ண ஆடை அணிந்திருக்கிறீர்கள்?

வெள்ளை நிற நீள ஸ்கர்ட்டும், கருப்பு நிற டாப்ஸும்....

12. என்ன பாட்டு கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்?

உன்னை சரணடைந்தேன்
உன்னுள்ளே நான் பிறந்தேன்..
என்னில் உறைந்திருந்தேன்..
உன்னுள்ளே நான் கரைந்தேன்
கண்கள்
இமையை விட்டு என்னையே வந்து நிற்க..
ஸ்வாசம் காற்றை விட்டு உன்னையே தேடி செல்ல..
தாயாக மாறிப்போனாயே
வேறாக
தாங்கி நின்றாயே
அயராது ஓடி வந்து
இசையாக நீ இருக்க
கண்ணிருடன் மாயத்திலே
காலமெல்லாம் உப்பைப்போல
உந்தனுள்ளே நானிருப்பேனே..

எனக்கு மிகவும் பிடித்த பாடல்....

13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக மாற உங்களுக்கு ஆசை?

கருப்பு வண்ணம்....

14. பிடித்த மணம்?

பிறந்த குழந்தையின் மணம்... மழைக்காலத்தின் முதல் மழைக்குப்பின் வரும் மண்வாசம், மலைப்பிரதேசங்களில் வரும் மூலிகைகள் கலந்த ஈரக்காற்றின் மணம்...பெட்ரோல் மணம்... நெயில்பாலிஷ் வாசம்.....(பொம்பளைப்புள்ளையாச்சே... ;))) இப்படி லிஸ்ட் நீண்டுட்டே போகும்....

15. நீங்கள் அழைக்கப் போகும் நபர்கள் யார் யார்? ஏன் உங்களுக்கு அவர்களைப் பிடித்து உள்ளது? அவர்களை அழைக்கக் காரணம் என்ன?

என் மேல் அதிகம் அன்பும் அக்கறையும் கொண்ட இணையம் தந்த அன்பான அண்ணன் விஷ்ணு...எனக்கு அறிவுரை சொல்லி ஒரு சிறுக்குழந்தையைப்போல.. தாய் பறவை தன் குஞ்சுகளை காப்பதுப்போல் என்னை காத்து வருகிறார்கள்.....அண்ணாவின் குட்டி குட்டி கவிதைகள் என்னை மிகவும் கவர்ந்தவை.... அதிர்ந்து பேச தெரியாதவர்... கோபத்தைக்கூட அன்பா மட்டுமே காட்டத்தெரிந்தவர்....


மீறான் அன்வர் என் தம்பி....கூப்பிடலாம்னு இருந்தேன் ஆனா எனக்கு வேலைப்பளு அதிகமானதால தாமதமாச்சு.... தம்பியை நண்பர் கோகுலன் அழைத்துவிட்டார்...


16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு

அக்காவின் அனைத்து பதிவுகளும் எனக்கு பிடிக்கும்....குறிப்பாக தொடர்கதைகளை மிகவும் ரசித்து படிப்பேன்.. சாந்தி அக்காவின் பதிவுகளை படிக்கும் போது எல்லா வித உணர்வுகளும் வரும்.. சிரிப்பு, சந்தோஷம், மனதைரியம், சோகம், நக்கல், நையாண்டி எல்லாம் கலந்த பல்சுவை விருந்து...

17. பிடித்த விளையாட்டு?

கூடைப்பந்து... ஸ்கூல் டேஸ்ல விளையாடியதுண்டு....

சில‌ ச‌ம‌ய‌ம் ச‌மைய‌லும்..:))

18. கண்ணாடி அணிபவரா?

கண்ணாடி போடலாம்னு ஒரு ஆசைல கண்ணு டெஸ்ட் பண்ணுங்க டாக்டர்ன்னு போய் கேட்டும் உன் கண்ணு நல்லாத்தானிருக்குன்னு டாக்டரே துரத்திட்டாங்க...

19. எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?

இயக்குனர் திரு. பாலசந்தரின் அனைத்து படங்களும் பிடிக்கும்... வாழ்கையின் எதார்த்தம் சொல்லும் படங்கள், நகைச்சுவை படங்கள், மென்மையான காத்ல சொல்லும் படங்கள் பிடிக்கும்.....

20. கடைசியாகப் பார்த்த படம்?

வாரணமாயிரம்... எங்கங்க நேரமிருக்கு படம் பார்க்க....

21. பிடித்த பருவகாலம் எது?


மழைக்காலமும், அதை தொடர்ந்து வரும் பனிக்காலமும் மிக மிக பிடிக்கும்....

22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்?

கலைஞரின் சிறுகதை தொகுப்புகள்...

23. உங்கள் டெக்ஸ்-டொப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒரு தடவை மாற்றுவீர்கள்?

அட்லீஸ்ட் இரண்டு வாரத்திற்கு ஒரு முறை மாற்றுவேன்...வெளியே சென்று காண முடியாத இயற்கை அழகினை டெஸ்க்-டாப்பின் கொண்டு வந்திருவேன்... :)

24. உங்களுக்குப் பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?

பிடித்த சத்தம் -
என்னுடைய அலுவலக ஜன்னலின் குடியிருக்கும் மைனாக்களின் சத்தம்.... காலை நேரங்களில் கூவும் குயிலின் சத்தம்...கடலலைகளின் சத்தம்...கொட்டும் அருவியின் ஓசை....இப்படி லிஸ்ட் நீண்டுட்டே போகும்

பிடிக்காத சத்தம் -
மனதை திடுக்கிட வைக்கும் எந்த சத்தமும் பிடிக்காது.... மனதிற்கு இனியவர்களின் சத்தமேயில்லாத மௌனமும் பிடிக்காது....

25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிகபட்சத் தொலைவு?

சமீபத்தில் சென்று வந்த கொடைக்கானல் பயணம்....

26. உங்களுக்கு ஏதாவது தனித்திறமை இருக்கிறதா?

கொஞ்சமா எழுதுவேன்... நிறைய ரசிப்பேன்... இது தனித்திறமையில்லைத்தான்....அதிகமா பொறுமையாயிருப்பேன்.... :) :)

27. உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத விடயம்?

முன் சிரித்து பின் தூற்றுவது அறவே பிடிக்காது..... சாலையில் எச்சில் உமிழ்பவர்களைக் கண்டாலே எங்கிருந்துதான் கோபம் வருமோ தெரியாது... அப்படி ஒரு கோவம் வரும்... :(

28. உங்களுக்கு உள்ளே இருக்கும் ஒரு சாத்தான்?

மனதில் எதையும் மறைத்து வைக்கத்தெரியாது.....

29. உங்களுக்குப் பிடித்த சுற்றுலாத் தலம்?


கடற்கரை கிராமங்கள், மலையும் மலை சார்ந்த அனைத்து இடங்களும்.....

30. எப்படி இருக்கவேண்டுமென்று ஆசை?

நானும் சந்தோஷமாகயிருந்து, என்னை சுற்றியுள்ளவர்களையும் சந்தோஷமாக வைத்திருக்கவே எனக்கு ஆசை...

31.கணவர் இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்?

இன்னும் அப்படி ஒரு சந்தர்ப்பம் அமையவில்லை.....அமைந்தால்.. அவர் இல்லாமல் அவருக்காக அவரின் தேவைகளை அவர் கேட்கும் முன்னரே செய்து முடிப்பது.....


32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்கள்.

தடைகளற்ற வாழ்கையில்லை...தடைகளகற்றி வாழ்வதே வாழ்கை.....

:) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :)

8 comments:

Anitha said...

\\பிடித்த விளையாட்டு?

கூடைப்பந்து... ஸ்கூல் டேஸ்ல விளையாடியதுண்டு....

சில‌ ச‌ம‌ய‌ம் ச‌மைய‌லும்..:))\\

samaikirathu ungalku oru vilaiyaatta???

:))

Anitha said...

\\வித்யா - எங்க வீட்டுல எல்லாருக்கும் ஆங்கில எழுத்து 'வி' யில் தான் பெயர்.. வினோத், வசந்த்... அதனால் எனக்கு வித்யா...\\


adadey ithu enaku evlo naal theriyathey, nice name.......VIDHYA:))

நட்புடன் ஜமால் said...

நீண்ட நாட்களுக்கு பிறகு ...

கேள்விகளுக்கு பதிலோடு ...

நட்புடன் ஜமால் said...

அவர் இல்லாமல் அவருக்காக அவரின் தேவைகளை அவர் கேட்கும் முன்னரே செய்து முடிப்பது.....\\

அருமை.

மேலும் வாழ்க்கையை பற்றி சொன்னதும் நல்லாயிருக்கு

பதில்கள் எதார்த்தமா இரசிக்கும்படியாகவும் இருக்கு

Gold Bala said...

// வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்கள்.

தடைகளற்ற வாழ்கையில்லை...தடைகளகற்றி வாழ்வதே வாழ்கை.....//

Nalla irukee ithu..

Oru Live interview paartha effet tharuthu unga reply..

Nice Maria..[:)]

தமிழிச்சி said...

அழகான பதில்கள். வாழ்த்துக்கள்.

ராம்.CM said...

இடைவேளி அதிகமானாலும் பதிவு அருமை. ஒவ்வொரு பதிலும் நீங்கள் "நல்லவர்'" என்பதை உணர்த்துகிறது.வாழ்த்துகள்

Joe said...

Marilyn means star of the sea.

//
சாலையில் எச்சில் உமிழ்பவர்களைக் கண்டாலே எங்கிருந்துதான் கோபம் வருமோ தெரியாது... அப்படி ஒரு கோவம் வரும்... :(
//
அப்போ நீங்க சென்னைல இருக்கவே முடியாது, தினமும் பத்து பேரைத் திட்டியே BP வந்திரும்!