Thursday, May 7, 2009

காதலாய் மாறிய‌ நட்பிற்கு த‌ண்ட‌னை....


டேய் இன்னைக்கு சமைக்கும் போது
கையிலே லேசா எண்ணை தெரிச்சுருச்சுடா!!
என்னடி சொல்லுறே கவனமா
சமைக்கக்கூடாதா லூசு டி நீ
டாக்ட‌ர்ட்டே போனியா??
ம‌ருந்து ஏதாவ‌து போட்டியா??

நாள் முழுவ‌தும் உன்னிட‌மிருந்து
அழைப்புமில்லை குறுந்த‌க‌வ‌லுமில்லை
என் ம‌ன‌ம் த‌வித்த‌து..
என்ன‌ ஆச்சு இவ‌னுக்கு?
ஏன் ஏதும் த‌க‌வ‌லில்லை?
நினைக்கும் போதே வந்ததழைப்பு..

சாரி மா இன்னைக்கு கொஞ்ச‌ம் வேலைய‌திக‌ம்
போனும் டாப் அப் ப‌ண்ண‌ல...
நீ வெயிட் ப‌ண்ணுவேத்தெரியும்
எப்ப‌டில்லாம் யாருகிட்ட‌லாம்
பொல‌ம்பிருப்பேன்னுத்தெரியும்
அதான் கூப்பிட்டேன் டி..
இப்படியெல்லாம் பதறியது நட்பு....

நிலவரசி ந‌டுவானில்
ந‌ட்ச‌த்திர‌ தோழிக‌ளோடு
த‌னை க‌வ‌ர்ந்துசெல்ல‌ நினைக்கும்
மேக‌க்காத‌லனைப்ப‌ரிக‌சித்து
விளையாடுமந்த‌
ர‌ம்மிய‌மானத்த‌ருண‌ம‌தில்
என்னிரு க‌ர‌ம் ப‌ற்றி
உந்நெஞ்சோடணைத்து
மென்மையாய் இதழ்ப‌தித்து
என் வாழ்கையினை ஸ்திர‌ப்ப‌டுத்த
நீ விரும்புவதாய் சொன்ன‌
அந்த‌ ஒரு நொடிப்பொழுது வாழ்வின்
துய‌ர்பொழுத‌னைத்தையுமற‌ந்து
உந்தோள் சேர்ந்தேனே....

அத‌ன்பின் நிக‌ழ்ந்த‌வைய‌னைத்தும்
அனுதினமும் எனை வ‌தைக்கிற‌தே
அது ஏனுன‌க்கு புரியாம‌ல் போன‌து???
உந்தோள் சாய்ந்த‌ நொடிக்கிடைத்த‌
இன்ப‌ம் இன்றுமென்னை சுக‌ப்ப‌டுத்துகிற‌து
ஆனாலும் நீ இப்போது எனைவிட்டு
வில‌கி நிற்கும் ஒவ்வொரு நொடியும்
கால‌னின் அவையிலிருக்கும்
எண்ணைக்கொப்ப‌றையிலேயே
முழுவதுமாய் அமிழ்ந்தெடுப்ப‌துப்போல்
வேத‌னைத்த‌ருகிற‌தே...

எண்ணைத்தெரித்த‌த‌ற்கே
துடிதுடித்த‌ நீ.. இன்று
என்னிலைய‌றிந்தும் கைக்க‌ட்டி
வாய்மூடி நிற்கும் கார‌ண‌ம்
தெரியாம‌ல் த‌வித்திருக்கிறேன்
இதுதான் காத‌லாய் மாறிப்போன‌
ந‌ட்பிற்கு த‌ண்ட‌னையோ???


30 comments:

புதியவன் said...

முதல் மூன்று பத்தியிலும் ஒரு அழகிய
கதையாய் நகர்கிறது கவிதை...

நட்பின் உரிமையை உரிய இடத்தில்
வெளிக்காட்டி இருப்பது அருமை...

புதியவன் said...

//நிலவரசி ந‌டுவானில்
ந‌ட்ச‌த்திர‌ தோழிக‌ளோடு
த‌னை க‌வ‌ர்ந்துசெல்ல‌ நினைக்கும்
மேக‌க்காத‌லனைப்ப‌ரிக‌சித்து
விளையாடுமந்த‌
ர‌ம்மிய‌மானத்த‌ருண‌ம‌தில்//

வார்த்தைகளில் விளையாடியிருக்கிறீர்கள்...
தோழிகள் வரிசையில் நீங்க இருக்கீங்களே...

புதியவன் said...

//என்னிரு க‌ர‌ம் ப‌ற்றி
உந்நெஞ்சோடணைத்து
மென்மையாய் இதழ்ப‌தித்து
என் வாழ்கையினை ஸ்திர‌ப்ப‌டுத்த
நீ விரும்புவதாய் சொன்ன‌
அந்த‌ ஒரு நொடிப்பொழுது வாழ்வின்
துய‌ர்பொழுத‌னைத்தையுமற‌ந்து
உந்தோள் சேர்ந்தேனே....//

நட்பு பூ காதலாக மலரும் மெல்லிய உணர்வுகளை அழகிய வரிகள் படம் பிடித்திருக்கிறீர்கள் நட்சத்திரா...

புதியவன் said...

//கால‌னின் அவையிலிருக்கும்
எண்ணைக்கொப்ப‌றையிலேயே
முழுவதுமாய் அமிழ்ந்தெடுப்ப‌துப்போல்
வேத‌னைத்த‌ருகிற‌தே...
//

வேதனையை வார்த்தைகளில் உணர முடிகிறது...

புதியவன் said...

//எண்ணைத்தெரித்த‌த‌ற்கே
துடிதுடித்த‌ நீ.. இன்று
என்னிலைய‌றிந்தும் கைக்க‌ட்டி
வாய்மூடி நிற்கும் கார‌ண‌ம்
தெரியாம‌ல் த‌வித்திருக்கிறேன்//

இந்த இடத்தில் என்ன சொல்வதென்று தெரியவில்லை..

என் கருத்துக்கள் நிச்சயம்
இதில் முரண்படும்...

புதியவன் said...

//இதுதான் காத‌லாய் மாறிப்போன‌
ந‌ட்பிற்கு த‌ண்ட‌னையோ???//

சோகத்தின் உச்சம் தொட்ட முடிவு...

நட்புக் கவிதை எழுதுவதில் மீண்டும் உங்களுக்கே முதலிடம்...வாழ்த்துக்கள் நட்சத்திரா...

Natchathraa said...

//இந்த இடத்தில் என்ன சொல்வதென்று தெரியவில்லை..

என் கருத்துக்கள் நிச்சயம்
இதில் முரண்படும்...//

Muranpadu irunthalum parava illai puthiyavan... ungalin karuthukkalai pathiyungal.. thiruthangaluku udhavumey...

புதியவன் said...

////இந்த இடத்தில் என்ன சொல்வதென்று தெரியவில்லை..

என் கருத்துக்கள் நிச்சயம்
இதில் முரண்படும்...//

Muranpadu irunthalum parava illai puthiyavan... ungalin karuthukkalai pathiyungal.. thiruthangaluku udhavumey...//

நட்பில் துடிதுடித்தது காதலான போது துடிக்கவில்லை என்று சொல்ல
முடியாது காதலுக்கும் நிச்சயம்
அந்த துடிதுடிப்பு இருக்கும் எனபது தான்
என் கருத்து...

இதில் தான் என் கருத்து முரண்படும் என்று சொல்ல வந்தேன்...

திருத்திக் கொள்ளுமளவுக்கு கவிதையில் குறையொன்றுமில்லை...தொடர்ந்து நிறைய எழுதுங்க நட்சத்திரா...

வண்ணத்துபூச்சியார் said...

அருமை...

pugal said...

இந்த கவிதையையை விமர்சிக்கும் அளவுக்கு நான் கவிஞனில்லை...ஆனால்...
இந்த கதையை படித்து கண் கலங்கினேன்..இந்த வகையில் நான் மனிதன்.

Natchathraa said...

//முதல் மூன்று பத்தியிலும் ஒரு அழகிய
கதையாய் நகர்கிறது கவிதை...

நட்பின் உரிமையை உரிய இடத்தில்
வெளிக்காட்டி இருப்பது அருமை...//

உண்மை தான் புதியவன்... இந்த உண்மை நிகழ்வை கவிதையாக எப்படி சொல்லன்னு தெரியலை அதான் கதை மாதிரி எழுதிட்டேன்...

Natchathraa said...

//வார்த்தைகளில் விளையாடியிருக்கிறீர்கள்...
தோழிகள் வரிசையில் நீங்க இருக்கீங்களே...//

ஹம்ம்ம் ஆமாம்ல.... ;-)

Natchathraa said...

//நட்பு பூ காதலாக மலரும் மெல்லிய உணர்வுகளை அழகிய வரிகள் படம் பிடித்திருக்கிறீர்கள் நட்சத்திரா...//

ஹம்ம்ம் உணமையில் அது பூ மலருகின்றது போல் மென்மையான தருணம் தான் புதியவன்...

வாழ்வின் மொத்த சந்தோஷமும் அந்த ஒரு நொடிப்பொழுதில்.....

Natchathraa said...

//வேதனையை வார்த்தைகளில் உணர முடிகிறது...//

எப்படி அளவில்லா மகிழ்ச்சியிருந்ததோ அதை விட பல மடங்கு அதிக வலி நிறைந்த நிமிடங்கள்....

Natchathraa said...

//சோகத்தின் உச்சம் தொட்ட முடிவு...//

ஹம்ம்ம்... உண்மை...

நட்புக் கவிதை எழுதுவதில் மீண்டும் உங்களுக்கே முதலிடம்...வாழ்த்துக்கள் நட்சத்திரா...

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி புதியவன்....

Natchathraa said...

//நட்பில் துடிதுடித்தது காதலான போது துடிக்கவில்லை என்று சொல்ல
முடியாது காதலுக்கும் நிச்சயம்
அந்த துடிதுடிப்பு இருக்கும் எனபது தான்
என் கருத்து...//

இங்கே நான் துடிக்கவில்லைன்னு சொல்ல வரலை புதியவன்... துடிக்குறது தெரிந்தும் ஏதோ சில காரணங்களுக்காக சொன்ன காதலை உறுதிப்படுத்த முடியா நிலையில் தவிக்கும் கவிதையின் நாயகன் கைக்கட்டி வாய் மூடி நிற்பது தான் ஏற்றுக்கொள்ளமுடியவில்லைன்னு சொன்னேன்...

முன்பை விட இப்போது தான் அதிக தவிப்பு இருக்கும் ஆனால் வெளிக்காட்டாமல் தனக்குள்ளே போட்டு குழப்பிக்கொள்ளும் அவனின் நிலை அவளுக்கு வேதனை...

Natchathraa said...

// வண்ணத்துபூச்சியார் said...
அருமை...//

நன்றிங்க....

Natchathraa said...

//இந்த கவிதையையை விமர்சிக்கும் அளவுக்கு நான் கவிஞனில்லை...ஆனால்...
இந்த கதையை படித்து கண் கலங்கினேன்..இந்த வகையில் நான் மனிதன்...//

ஹம்ம் கருத்துக்கு நன்றி புகழ்... ஆனால் கலங்க வேண்டாம்... எல்லாம் நன்மையில்தான் முடியும்....

சுரேகா.. said...

//இதுதான் காத‌லாய் மாறிப்போன‌
ந‌ட்பிற்கு த‌ண்ட‌னையோ???//

மிகச்சரியான கோணம்!
பாந்தமான வரிகள்!

வாழ்த்துக்கள்!

எம்.ரிஷான் ஷெரீப் said...

உண்மைக்காதலோ, உண்மை நட்போ என்றுமே மாறாது சகோதரி. இரண்டிலும் சுயநலம் கலந்திடும்பொழுதுதான் தண்டனை உள்நுழைகிறது..நுழைந்திருக்கிறது.

கவிதை அருமை சகோதரி..தொடருங்கள் !

Divya said...

மனதை கணமாக்கும் வரிகளுடன் கவிதை அருமை தோழி:)

நட்பிற்கும் காதலுக்கும் நூழிலை இடைவெளிதான், அதை சரியாக புரிந்துக்கொண்டால், பல குழப்பங்களையும், மன கசப்புகளையும் தவிர்க்கலாம்.


[பிறந்தநாள் வாழ்த்திற்கு என் மனமார்ந்த நன்றி நட்சத்திரா]

ராம்.CM said...

நட்புக் கவிதை எழுதுவதில் அருமை...வாழ்த்துக்கள் நட்சத்திரா...

siva said...

caption itself is a poem...

i visuvalize a butterfly crying in agony...

nice .. continue your work.

regards
g.sivakumar

நட்புடன் ஜமால் said...

இதுதான் காத‌லாய் மாறிப்போன‌
ந‌ட்பிற்கு த‌ண்ட‌னையோ???\\

சிறப்பா சொன்னீங்க.

இவ்வரிகளில் அனைத்தும் விளங்குது.


நட்பு , காதல் - மிக சின்ன வித்தியாசம் தான்.

அது பழகுகின்றவர்களில் மாறுபடலாம்.

காதலுக்கான நட்பாக இருந்திருக்கலாம், அப்படியென்றால் தவறில்லை தானே ...

ஷோபிகண்ணு said...

//இதுதான் காத‌லாய் மாறிப்போன‌
ந‌ட்பிற்கு த‌ண்ட‌னையோ???//

இந்த பசங்க சொன்னா எங்க கேட்குதுங்க. அன்னைக்கு ப்ரன்டுன்னான், நேத்து லவ்வர்ன்னான் இன்னைக்கு ஒய்புங்கிறான். என்னத்த சொல்லறது போங்க.... அட தப்பென்ன இருக்குங்கிறேன்....

நிலாரசிகன் said...

காதாலாய்?

Natchathraa said...

மிக்க நன்றி நிலாரசிகன்....

Gold Bala said...

எண்ணைத்தெரித்த‌த‌ற்கே
துடிதுடித்த‌ நீ.. இன்று
என்னிலைய‌றிந்தும் கைக்க‌ட்டி
வாய்மூடி நிற்கும் கார‌ண‌ம்
தெரியாம‌ல் த‌வித்திருக்கிறேன்
இதுதான் காத‌லாய் மாறிப்போன‌
ந‌ட்பிற்கு த‌ண்ட‌னையோ???//

வலியின் வேதனையை வார்த்தையில் தெளிந்த நீர் போல
தெரியப்படுத்தி விட்டாய் தோழி..

வலியின் வேதனை அறிந்தவர் அறிவாராக ..

Nan said...

//டேய் இன்னைக்கு சமைக்கும் போது
கையிலே லேசா எண்ணை தெரிச்சுருச்சுடா!!
என்னடி சொல்லுறே கவனமா
சமைக்கக்கூடாதா லூசு டி நீ
டாக்ட‌ர்ட்டே போனியா??
ம‌ருந்து ஏதாவ‌து போட்டியா??//

பளிச் என சொல்லியிருக்கிறீர்கள்


//நாள் முழுவ‌தும் உன்னிட‌மிருந்து
அழைப்புமில்லை குறுந்த‌க‌வ‌லுமில்லை
என் ம‌ன‌ம் த‌வித்த‌து..
என்ன‌ ஆச்சு இவ‌னுக்கு?
ஏன் ஏதும் த‌க‌வ‌லில்லை?
நினைக்கும் போதே வந்ததழைப்பு..//

உமக்கு நீர்தான் சமம்!

கொன்னு கொலையா பிச்சுட்டிங்க!

இன்னும் இன்னும் எதிர்பார்த்து!


//சாரி மா இன்னைக்கு கொஞ்ச‌ம் வேலைய‌திக‌ம்
போனும் டாப் அப் ப‌ண்ண‌ல...
நீ வெயிட் ப‌ண்ணுவேத்தெரியும்
எப்ப‌டில்லாம் யாருகிட்ட‌லாம்
பொல‌ம்பிருப்பேன்னுத்தெரியும்
அதான் கூப்பிட்டேன் டி..
இப்படியெல்லாம் பதறியது நட்பு....//

எல்லோருக்குமான உணர்வுகளை அழகாய் சொல்லியிருக்கிறீர்கள்
வாழ்த்துக்கள்...

//நிலவரசி ந‌டுவானில்
ந‌ட்ச‌த்திர‌ தோழிக‌ளோடு
த‌னை க‌வ‌ர்ந்துசெல்ல‌ நினைக்கும்
மேக‌க்காத‌லனைப்ப‌ரிக‌சித்து
விளையாடுமந்த‌
ர‌ம்மிய‌மானத்த‌ருண‌ம‌தில்
என்னிரு க‌ர‌ம் ப‌ற்றி
உந்நெஞ்சோடணைத்து
மென்மையாய் இதழ்ப‌தித்து
என் வாழ்கையினை ஸ்திர‌ப்ப‌டுத்த
நீ விரும்புவதாய் சொன்ன‌
அந்த‌ ஒரு நொடிப்பொழுது வாழ்வின்
துய‌ர்பொழுத‌னைத்தையுமற‌ந்து
உந்தோள் சேர்ந்தேனே....//

ஒரு நிமிடம் மனம் ஸ்தம்பிக்கிறது ஹும்ம்ம்ம் படிச்சி முடிக்கறதுகுள்ள தொண்ட தண்ணி வத்தி போச்சு….


//அத‌ன்பின் நிக‌ழ்ந்த‌வைய‌னைத்தும்
அனுதினமும் எனை வ‌தைக்கிற‌தே
அது ஏனுன‌க்கு புரியாம‌ல் போன‌து???
உந்தோள் சாய்ந்த‌ நொடிக்கிடைத்த‌
இன்ப‌ம் இன்றுமென்னை சுக‌ப்ப‌டுத்துகிற‌து
ஆனாலும் நீ இப்போது எனைவிட்டு
வில‌கி நிற்கும் ஒவ்வொரு நொடியும்
கால‌னின் அவையிலிருக்கும்
எண்ணைக்கொப்ப‌றையிலேயே
முழுவதுமாய் அமிழ்ந்தெடுப்ப‌துப்போல்
வேத‌னைத்த‌ருகிற‌தே...//

பிரிவுகளைக் கொஞ்சம்
பிரியமாய் யோசிக்கிறேன் அற்புத சிந்தனை அழகிய கவிதை
உறவு என்றொரு சொல்லிருந்தால் பிரிவு என்றொரு பொருளிருக்கும் ம்..ம்..ம்..ம்.. இயற்கையின் நியதி.

//எண்ணைத்தெரித்த‌த‌ற்கே
துடிதுடித்த‌ நீ.. இன்று
என்னிலைய‌றிந்தும் கைக்க‌ட்டி
வாய்மூடி நிற்கும் கார‌ண‌ம்
தெரியாம‌ல் த‌வித்திருக்கிறேன்
இதுதான் காத‌லாய் மாறிப்போன‌
ந‌ட்பிற்கு த‌ண்ட‌னையோ???//

நம்ப முடியாத என்று சொல்வார்களே அதற்குரிய அத்தனை இலக்கணங்களும் கொண்ட உண்மை நிகழ்வு...கவிதையில் நிறைய உண்மை உள்ளது..

அருமையான உங்கள் வார்த்தை நயங்களைக் கண்டு வியந்துதான் போனேன். ஒரு கதையே கவிதையாகி கண்ணீர் பெருக்கெடுத்த நிகழ்வு இன்றுதான் நடந்தது. தொடங்கிவிட்டால் நிறுத்திவிடமுடியாதபடிக்கு கவிதையை மிக அழகாகக் கோர்த்திருக்கிறீர்கள்.

anputan muthu said...

mika arumai ethu pontra velietukal thara ventum enpathu enathu ventukol
anputan muthuselvam
nantri sakothari:)