Wednesday, February 25, 2009

தவறென்ன செய்தேன் நான்?


மனமொத்த சினேகிதர்கள் நாம்
விலகி நிற்க நேர்ந்திருக்கிறதின்று
உன்னன்பை,அருகாமையை
இக்கணத்திலும் வேண்டியபடி
என்ன நிகழ்ந்தது நமக்குள்ளென்று
அறியாதிருக்கிறேன் நான்
உனையழைத்திடத் துடித்திடும் என்
விரல்களைத் தடுத்து நிறுத்தியிருக்கிறது
'நான் மட்டும் ஏன்?' எனும் அகந்தை
இன்று தவறாய்ப்போன எல்லாமே
தயக்கங்கங்களேதுமின்றி அழைத்திட்ட நாட்களில்
சரியாகத்தானிருந்தது அன்று
எந்தப்பாதையில் வழிதவறிப்போனது
நம் அன்பு?
வார்த்தைகளில் அனைத்தும் பகிர்ந்திட்ட நீயின்று
நேசம், மொழியறியாதொரு
வேற்றுக்கிரகவாசி ஆனாயோ
தவித்து உருகி எரிந்து
வழிகிறதடா என்னிதயம்
புரிகிறதா உனக்கு
என்ன பேசுகிறோம் என்றில்லாமல்
நாம் உரையாடிக் களித்த நாட்களில்
நட்சத்திரங்கள் கண்சிமிட்ட
மேகங்களுக்குள் ஒளிந்த நிலவு
நடுவானம் வரை நம்மோடு வரும்
புரிதலெனும் மெல்லிய நூலிழை அகன்று
விரிசல் கண்டது நம் நட்பு
ஆறுதலைத் தேடிய துயர்பொழுதுகளில்
தோள் தந்த உன் சினேகம்
வாழ்வின் இறுதி வரை வேண்டுமெனக்கு
என்ன சொல்கிறாய்?
நழுவிய நிமிடத்தின் எந்தக் கணம்
பிரிவை ஏந்தி வந்தது
என் தவறேதென
எண்ணி எண்ணிச் சோர்கின்றன
மனமும், விழிகளும்
விழி மூடித் திறக்கும் கணம்
நீ எதிரில் நிற்பாயெனக் காத்திருக்கிறேன்...

21 comments:

புதியவன் said...

ஆஹா...அழகானதொரு நட்புக் கவிதை...

//உனையழைத்திடத் துடித்திடும் என்
விரல்களைத் தடுத்து நிறுத்தியிருக்கிறது
'நான் மட்டும் ஏன்?' எனும் அகந்தை//

ம்ம்ம்...நட்பிலும் இந்த அகந்தை உண்டு தான்...

புதியவன் said...

//வார்த்தைகளில் அனைத்தும் பகிர்ந்திட்ட நீயின்று
நேசம், மொழியறியாதொரு
வேற்றுக்கிரகவாசி ஆனாயோ
தவித்து உருகி எரிந்து
வழிகிறதடா என்னிதயம்
புரிகிறதா உனக்கு//

நட்பின் உணர்வுகளை இந்த அளவுக்கு இது வரை நான் படித்ததாய் நினைவில்லை...

புதியவன் said...

//நட்சத்திரங்கள் கண்சிமிட்ட
மேகங்களுக்குள் ஒளிந்த நிலவு
நடுவானம் வரை நம்மோடு வரும்
புரிதலெனும் மெல்லிய நூலிழை அகன்று
விரிசல் கண்டது நம் நட்பு//

அருமை...வார்த்தைகள் விளையாடுது...

புதியவன் said...

/மனமும், விழிகளும்
விழி மூடித் திறக்கும் கணம்
நீ எதிரில் நிற்பாயெனக் காத்திருக்கிறேன்...//

உங்கள் நட்பு உங்களை நாடி வர வாழ்த்துக்கள் நட்சத்திரா...

Natchathraa said...

//ம்ம்ம்...நட்பிலும் இந்த அகந்தை உண்டு தான்...//

ஹம்ம்ம் இந்த அகந்தை தெளிந்தப்பின் தான் நட்பு இன்னும் ஆழமாகிறது புதியவன்....

Natchathraa said...

//நட்பின் உணர்வுகளை இந்த அளவுக்கு இது வரை நான் படித்ததாய் நினைவில்லை...//

மனதுக்கு மிகவும் நெருக்கமானவர்களின் பிரிவு இப்படி ஒரு உணர்வைத்தான் தருது என்ன செய்ய....

காதலின் வலியை விட நட்பின் வலி கொடியது... :-)

நட்புடன் ஜமால் said...

நட்பு விரைவில் வரும் ...

Natchathraa said...

//அருமை...வார்த்தைகள் விளையாடுது...//

//உங்கள் நட்பு உங்களை நாடி வர வாழ்த்துக்கள் நட்சத்திரா...//

உங்கள் ரசனைக்கும், முதல் பதிவிற்கும், வாழ்த்துகளுக்கும் நன்றிகள் புதியவன்...

Natchathraa said...

//நட்பு விரைவில் வரும் ...//

நன்றிகள் ஜமால்... :-)

தேவன் மாயம் said...

கவிதை பின்ன ஆரம்பிச்சிட்டீங்க.

தேவன் மாயம் said...

மனமொத்த சினேகிதர்கள் நாம்
விலகி நிற்க நேர்ந்திருக்கிறதின்று
உன்னன்பை,அருகாமையை
இக்கணத்திலும் வேண்டியபடி
என்ன நிகழ்ந்தது நமக்குள்ளென்று
அறியாதிருக்கிறேன் நான்///

எல்லோருக்கும் பொருந்தும் போல..

தேவன் மாயம் said...

இன்று தவறாய்ப்போன எல்லாமே
தயக்கங்கங்களேதுமின்றி அழைத்திட்ட நாட்களில்
சரியாகத்தானிருந்தது அன்று
எந்தப்பாதையில் வழிதவறிப்போனது
நம் அன்பு?///

மனத்தைப் படிக்க முடியாதே

தேவன் மாயம் said...

வார்த்தைகளில் அனைத்தும் பகிர்ந்திட்ட நீயின்று
நேசம், மொழியறியாதொரு
வேற்றுக்கிரகவாசி ஆனாயோ
தவித்து உருகி எரிந்து
வழிகிறதடா என்னிதயம்
புரிகிறதா உனக்கு ///

நல்ல கவிஞராகி விட்டீர்கள்

தேவன் மாயம் said...

மனமும், விழிகளும்
விழி மூடித் திறக்கும் கணம்
நீ எதிரில் நிற்பாயெனக் காத்திருக்கிறேன்...///

காத்திருப்பு வீண்போகாது!!

kuma36 said...

//துயர்பொழுதுகளில்தோள் தந்த உன் சினேகம்வாழ்வின் இறுதி வரை வேண்டுமெனக்கு என்ன சொல்கிறாய்? நழுவிய நிமிடத்தின் எந்தக் கணம்பிரிவை ஏந்தி வந்ததுஎன் தவறேதெனஎண்ணி எண்ணிச் சோர்கின்றனமனமும், விழிகளும்விழி மூடித் திறக்கும் கணம்நீ எதிரில் நிற்பாயெனக் காத்திருக்கிறேன்..//

ரொம்ப நல்லாயிருக்கு!!

kuma36 said...

//நாம் உரையாடிக் களித்த நாட்களில்நட்சத்திரங்கள் கண்சிமிட்டமேகங்களுக்குள் ஒளிந்த நிலவுநடுவானம் வரை நம்மோடு வரும் //

அருமையான வரிகள். சூப்பர்

GK said...

தமிழை இப்படியும் ரசிக்க முடியுமா என வியந்தேன் தங்களின் கவிதையழகை கண்டு ...வாழ்த்துகள் தோழி..

Divya said...

கவிதை மிகவும் அழகு:))

உணர்வுபூர்வமான 'நட்பு' கவிதை மிகவும் அருமை நட்சத்திரா!

\\மொழியறியாதொரு வேற்றுக்கிரகவாசி ஆனாயோதவித்து உருகி எரிந்துவழிகிறதடா என்னிதயம்புரிகிறதா உனக்கு\\


வேதனைகளை பிரதிபலிக்கும் வரிகளல்ல.....வலிகள்:((

மனதை தொட்டன வார்த்தைகள்!

உங்கள் நட்பு ,மீண்டும் தொடர என் வாழ்த்துக்கள்!

butterfly Surya said...

very nice.

நல்லாயிருக்கு.

வாழ்த்துகள்.

உலக சினிமா பற்றி பதிவுகள் தங்கள் வருகைக்காக காத்திருக்கிறது.

நன்றி.

தீண்டாமெழுகுகள்..! said...

வார்த்தைகளில் அனைத்தும் பகிர்ந்திட்ட நீயின்று
நேசம், மொழியறியாதொரு
வேற்றுக்கிரகவாசி ஆனாயோ
தவித்து உருகி எரிந்து
வழிகிறதடா என்னிதயம்
புரிகிறதா உனக்கு//

உங்களை என்ன சொல்லி பாராட்ட.. வார்த்தைகளை தேடி கொண்டு இருக்கேன் நான்..

நட்பை இந்த அளவுக்கு யாரும் சொல்லி இருக்க வாய்ப்பே இல்லை..

by-
வால் நட்சத்திரத்தில் பிறந்தவன்

Unknown said...

//மனமொத்த சினேகிதர்கள் நாம்
விலகி நிற்க நேர்ந்திருக்கிறதின்று
உன்னன்பை,அருகாமையை
இக்கணத்திலும் வேண்டியபடி
என்ன நிகழ்ந்தது நமக்குள்ளென்று
அறியாதிருக்கிறேன் நான்//

இந்த அளவுக்கு வருந்தி எழுதும் நிலை ஏன் வந்தது??
[யார் இந்த நட்பு...சொல்லு...ஒரு கை பாத்துடலாம்...:) ]


//உனையழைத்திடத் துடித்திடும் என்
விரல்களைத் தடுத்து நிறுத்தியிருக்கிறது
'நான் மட்டும் ஏன்?' எனும் அகந்தை
இன்று தவறாய்ப்போன எல்லாமே
தயக்கங்கங்களேதுமின்றி அழைத்திட்ட நாட்களில்
சரியாகத்தானிருந்தது அன்று
எந்தப்பாதையில் வழிதவறிப்போனது
நம் அன்பு?//

பிரிவின் வலி உணர்த்தின வரிகள்
வாழ்த்துக்கள் சகோதரிக்கு

//வார்த்தைகளில் அனைத்தும் பகிர்ந்திட்ட நீயின்று
நேசம், மொழியறியாதொரு
வேற்றுக்கிரகவாசி ஆனாயோ
தவித்து உருகி எரிந்து
வழிகிறதடா என்னிதயம்
புரிகிறதா உனக்கு
என்ன பேசுகிறோம் என்றில்லாமல்
நாம் உரையாடிக் களித்த நாட்களில்
நட்சத்திரங்கள் கண்சிமிட்ட
மேகங்களுக்குள் ஒளிந்த நிலவு
நடுவானம் வரை நம்மோடு வரும்
புரிதலெனும் மெல்லிய நூலிழை அகன்று
விரிசல் கண்டது நம் நட்பு//

ஆனால் ஏனிந்த சோகம் ...
குட்டி குட்டி ஆசைகள் போல சந்தோசமாக கவிதைகள் வரட்டும் ...

//ஆறுதலைத் தேடிய துயர்பொழுதுகளில்
தோள் தந்த உன் சினேகம்
வாழ்வின் இறுதி வரை வேண்டுமெனக்கு
என்ன சொல்கிறாய்?
நழுவிய நிமிடத்தின் எந்தக் கணம்
பிரிவை ஏந்தி வந்தது
என் தவறேதென
எண்ணி எண்ணிச் சோர்கின்றன//

கவிதைகளில் கூட சோகம் உன்னை தாக்க வேண்டாம் என்பதே
இந்த தம்பின் ஆசைகள்....

//மனமும், விழிகளும்
விழி மூடித் திறக்கும் கணம்
நீ எதிரில் நிற்பாயெனக் காத்திருக்கிறேன்...//


உனக்கான காத்திருப்புகளில் கரைந்துபோன காலத்தைவிட
உறைந்துபோன உள்ளத்தை எப்படி மீட்பது....