Monday, October 6, 2008

ஓசையினூடே நிசப்தம்....

ஏழாவது மாடியில் இருக்கும்
என் அலுவலக ஜன்னல் வழியே
சென்னையின் உயர்ந்த கட்டிடங்கள்
அருகில் இருக்கும் பள்ளியில் விளையாடும்
பிள்ளைகளின் இன்பக் கூச்சல்
ரம்மியமாக என்னை தழுவிச்செல்லும் தென்றல்
கூடு திரும்பும் பறவைகள்
இத்தனை கட்டிடங்களுக்கிடையிலும்
ஆங்காங்கே பச்சைப்சேல் மரங்கள்
மின்சாரம் இல்லாததால் ஆஸ்பத்திரியின்
ஜெனரேட்டரின் இரைச்சல்
தூரத்தில் தெரியும் சாலை
க்கீங் ஹாரன் சத்ததுடன் வாகனங்கள்
பள்ளிக்கும் அலுவலகத்திற்கும் நடுவே குப்பத்தில்
சுறுசுறுப்பாய் வேலைப்பார்க்கும் மனிதர்கள்
இத்தனை சத்தங்கள் இருந்தும் ஏனோ
என் மனம் மட்டும் நிசப்தமாய்…

7 comments:

சித்தாந்தன் said...

மிக இயல்பானதும் எளிமையானதுமான வரிகளுடன் மனதைத் தொடுகின்றன உங்கள் கவிதைகள். வாழ்வின் வெறுமையை மனத்துள் படர வைக்கின்றன. சொற்களுக்கப்பாலும் கவிதைகளில் ஏதோ ஒன்று உள்நுழைந்து ஊர்வதை உணர முடிகின்றது.

சித்தாந்தன் said...

மிக இயல்பானதும் எளிமையானதுமான வரிகளுடன் மனதைத் தொடுகின்றன உங்கள் கவிதைகள். வாழ்வின் வெறுமையை மனத்துள் படர வைக்கின்றன. சொற்களுக்கப்பாலும் கவிதைகளில் ஏதோ ஒன்று உள்நுழைந்து ஊர்வதை உணர முடிகின்றது.

Natchathraa said...

வருகைக்கும், கருத்துக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி சிந்தாந்தன்..:)

Unknown said...

கூட்டத்தில் தனியாவதும்; தனிமையில் பேசிக் கொள்வதும் இளைஞர்களுக்கு ஒன்றும் புதிதல்லவே நட்சத்திரா.. அப்படி இருக்குமோ உன் மௌனம்?

Vishnu... said...

கவிதை மிக அருமை ..தங்கையே .. தனித்துவத்தில் தனிமை ..

அன்புடன்
அண்ணா ..

நீண்ட நாட்களாக வரவேண்டும் என நினைத்திருந்தேன் வர இயலவில்லை ..
இன்று தான் வர முடிந்தது ...

புதியவன் said...

//இத்தனை சத்தங்கள் இருந்தும் ஏனோ
என் மனம் மட்டும் நிசப்தமாய்…//

யதார்த்தமான கவிதை வரிகள்...
சில நேரங்களில் இதை நானும்
உணர்ந்திருக்கிறேன்...

Unknown said...

ஓசையினூடே நிசப்தம்!

அருமை மரியா!