
என்ன நட்பு இது!!!
காதலைவிட மிக கொடியதாய்
நித்தம் நித்தம் ஒரு தேடலுடன்
அதிகமதிகமாய் எதிர்ப்பார்ப்புடன்...
எனக்கு உன் நட்பு புரியவில்லையா
இல்லை உனக்கு என் நட்பு புரியவில்லையா
புரிதலில்தானேயுள்ளது நட்பு
அது நமக்கும் தெரியுமே...
பின்பு ஏன் இந்த கண்ணாமூச்சி???
எது எப்படியாவது இருக்கட்டும்..
உன்மீதான நட்பு நிரந்தரமானது
என் நலன் கருதி நீ விலகிநின்றால்
அது நட்பாகாது.. எந்த சூழ்நிலையிலும்
விலகாமலிருப்பதே தூயதொரு நட்பு
இதை நீ உணரும் காலம் தூரமில்லை
நட்பே...நீ உணரவில்லை என்பதும்கூட
பொய்தான்..உணரமறுக்கிறாயென்பதே
நிதர்சனமான உண்மை!!!
நீ வரும் காலமட்டும் உனக்காக
நம் நட்பின் இனிமையான
காலங்களை மனதிலிருத்தி நினைவுகளோடு
கைக்கோர்த்து
தனிமையில் நடப்பேன்...உன்வரவுக்குப்பின் இந்த உலகம்வியக்க நமைமறந்துஇந்த உலகுக்கு சத்தமிட்டு
சொல்லுவோம் நம் நட்பின் இனிமைகளை....