Friday, August 28, 2009

காக்கும் கேடயம்....


இறைவா
இன்னல்களுடன்
இரைஞ்சுகிறேன் - நான்
கேட்கும் நல்லவற்றைத்தான் - நீ
கேட்டும் கேட்காததுப்போல்
கொடுக்க நேரமெடுத்துக்கொள்கிறாய்
கோபத்தையாவது சீக்கிரம்
கொடு என்னை
காயப்படுத்துபவர்களிடமிருந்து என்னை
காக்கும் கேடயமாக இருக்கட்டும்....

9 comments:

Ravishna said...

ஏன் இந்த கோபம்????

நட்புடன்,
ரவிஷ்னா

சத்ரியன் said...

//கேட்கும் நல்லவற்றைத்தான் - நீ
கேட்டும் கேட்காததுப்போல்
கொடுக்க நேரமெடுத்துக்கொள்கிறாய்
கோபத்தையாவது சீக்கிரம்
கொடு என்னை
காயப்படுத்துபவர்களிடமிருந்து என்னை
காக்கும் கேடயமாக இருக்கட்டும்....//

நட்சத்ரா,

காயம் பட்டு வலி தாங்கும் வல்லமைதானே கேட‌யம்?

இறைவன் கொடுக்கட்டும். உங்கள் வேண்டுதல்களை.!

Several tips said...

நல்ல பதிவு.
அழகான படம்.

Natchathraa said...

நன்றி ரவிஷ்னா... கோபம் வரமறுக்கிறது.. அதுதான் இந்த கோபம்...

Natchathraa said...

நன்றி சத்ரியன்...என் வேண்டுதலுக்காய் இறைவனிடம் பரிந்துரை செய்வதற்கு...

Natchathraa said...

// Several tips said...
நல்ல பதிவு.
அழகான படம்.//

மிக்க நன்றி...

அன்புடன் நான் said...

//கோபத்தையாவது சீக்கிரம்
கொடு என்னை
காயப்படுத்துபவர்களிடமிருந்து என்னை
காக்கும் கேடயமாக இருக்கட்டும்//

கவிதை மிக அருமைங்க... பாராட்டுக்கள்.
ரெளத்ரம் பழக வேண்டுகிற்ற... ஒரு கவிதைக்கு ஏன் குழந்தைப் படம். கொஞ்சம் பெரியவர்களின் படமாக இருக்கலாமே... இது என் கருத்துத்தான்.

நேசமித்ரன் said...

நல்ல கவிதை

பாராட்டுக்கள்.

Esha Tips said...

அருமையான ஆழமான வரிகள்
வாழ்த்துக்கள்

http://tamilparks.50webs.com