Thursday, August 6, 2009
என்ன நட்பு இது!!!
என்ன நட்பு இது!!!
காதலைவிட மிக கொடியதாய்
நித்தம் நித்தம் ஒரு தேடலுடன்
அதிகமதிகமாய் எதிர்ப்பார்ப்புடன்...
எனக்கு உன் நட்பு புரியவில்லையா
இல்லை உனக்கு என் நட்பு புரியவில்லையா
புரிதலில்தானேயுள்ளது நட்பு
அது நமக்கும் தெரியுமே...
பின்பு ஏன் இந்த கண்ணாமூச்சி???
எது எப்படியாவது இருக்கட்டும்..
உன்மீதான நட்பு நிரந்தரமானது
என் நலன் கருதி நீ விலகிநின்றால்
அது நட்பாகாது.. எந்த சூழ்நிலையிலும்
விலகாமலிருப்பதே தூயதொரு நட்பு
இதை நீ உணரும் காலம் தூரமில்லை
நட்பே...நீ உணரவில்லை என்பதும்கூட
பொய்தான்..உணரமறுக்கிறாயென்பதே
நிதர்சனமான உண்மை!!!
நீ வரும் காலமட்டும் உனக்காக
நம் நட்பின் இனிமையான
காலங்களை மனதிலிருத்தி நினைவுகளோடு
கைக்கோர்த்து தனிமையில் நடப்பேன்...
உன்வரவுக்குப்பின் இந்த உலகம்
வியக்க நமைமறந்து
இந்த உலகுக்கு சத்தமிட்டு
சொல்லுவோம் நம் நட்பின் இனிமைகளை....
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
நீ வரும் காலமட்டும் உனக்காக
நம் நட்பின் இனிமையான
காலங்களை மனதிலிருத்தி நினைவுகளோடு
கைக்கோர்த்து தனிமையில் நடப்பேன்...]]
பக்குவம்.
கவிதை அட்டகாசமா இருக்கு !!
நட்பின் ஆழத்தை ஒவ்வொரு வரிகளிலும் உணர முடிந்தது:))
\\உன்வரவுக்குப்பின் இந்த உலகம்
வியக்க நமைமறந்து
இந்த உலகுக்கு சத்தமிட்டு
சொல்லுவோம் நம் நட்பின் இனிமைகளை....\\
விரைவில் சத்தமிட்டு நீங்கள் கூறவிருக்கும் உங்கள் நட்பின் இனிமையை கேட்க.....ஆவலுடன் வெயிட்டிங்!!
வாழ்த்துக்கள்!!
நட்பின் தேடல் அருமை தோழி
//நீ வரும் காலமட்டும் உனக்காக
நம் நட்பின் இனிமையான
காலங்களை மனதிலிருத்தி நினைவுகளோடு
கைக்கோர்த்து தனிமையில் நடப்பேன்...//
நட்சத்ரா,
மென்மை நிரம்ம்ம்ம்ம்ம்பிய வரிகள்.
பரபரக்கும் உலகில், பதட்டமின்றி யோசிக்கின்றீகள் போல.
நன்றி ஜமால்...
//விரைவில் சத்தமிட்டு நீங்கள் கூறவிருக்கும் உங்கள் நட்பின் இனிமையை கேட்க.....ஆவலுடன் வெயிட்டிங்!!
வாழ்த்துக்கள்!!//
மிக்க நன்றி அனி...
// GK said...
நட்பின் தேடல் அருமை தோழி//
தேடலில்லா வாழ்கையில்லை...
மிக்க நன்றி ஜி.கே..
//நட்சத்ரா,
மென்மை நிரம்ம்ம்ம்ம்ம்பிய வரிகள்.
பரபரக்கும் உலகில், பதட்டமின்றி யோசிக்கின்றீகள் போல.//
ஹம்ம்ம் இந்த யோசனையிலும் ஒரு சுகமிருக்கு சத்ரியன்...
மிக்க நன்றி...
//என்ன நட்பு இது!!!
காதலைவிட மிக கொடியதாய்
நித்தம் நித்தம் ஒரு தேடலுடன்
அதிகமதிகமாய் எதிர்ப்பார்ப்புடன்...//
தன்னுணர்வைப் பகிர்ந்து கொள்ளும் தோழமை வெள்ளை மனம் கொண்ட பிள்ளைக்கும் தெரிந்திருக்கிறது!
அழகு
வாழ்த்துகள்
தொடரட்டும் கவிப்பயணம்!
//எனக்கு உன் நட்பு புரியவில்லையா
இல்லை உனக்கு என் நட்பு புரியவில்லையா
புரிதலில்தானேயுள்ளது நட்பு
அது நமக்கும் தெரியுமே...//
மாறும் உலகில் மாறாதிருப்பது கடந்தகால நினைவுகள் தாம்!
//பின்பு ஏன் இந்த கண்ணாமூச்சி???
எது எப்படியாவது இருக்கட்டும்..
உன்மீதான நட்பு நிரந்தரமானது
என் நலன் கருதி நீ விலகிநின்றால்
அது நட்பாகாது.. எந்த சூழ்நிலையிலும்
விலகாமலிருப்பதே தூயதொரு நட்பு//
நச்.
கவிதைகளால் பெறுமதியான நட்பின் பெரும் வரலாறு சொல்லப்பட்ட விதம் அபாரம். அடிக்கடி சில வேளை நட்பினில் விரிசல்கள் சிலவேளைகளில் ஏற்பட்ட போதும், நட்பின் கனதி மாறாமல் யுகங்கள் தாண்டியும் கடத்தப்படும் நட்பின் இயல்பு அதிசயம்...
//இதை நீ உணரும் காலம் தூரமில்லை
நட்பே...நீ உணரவில்லை என்பதும்கூட
பொய்தான்..உணரமறுக்கிறாயென்பதே
நிதர்சனமான உண்மை!!!//
அருமை.யதர்த்தமான நட்பின் பக்கங்கள் ரசிக்கவைக்கிறது...
//நீ வரும் காலமட்டும் உனக்காக
நம் நட்பின் இனிமையான
காலங்களை மனதிலிருத்தி நினைவுகளோடு
கைக்கோர்த்து தனிமையில் நடப்பேன்...//
ரொம்ப அருமையான, உண்மையான கவிதை… கேக்குறதுக்கு மன்னிக்கவும் என்னை ஞியாபகம் இருக்குங்களா???
//உன்வரவுக்குப்பின் இந்த உலகம்
வியக்க நமைமறந்து
இந்த உலகுக்கு சத்தமிட்டு
சொல்லுவோம் நம் நட்பின் இனிமைகளை....//
உங்கள் மீது கோபம்தான் வருகிறது இவ்வளவு நாட்களாய் உங்கள் வலைப்பூ முகவரியை தெரிவிக்காமல் இருந்ததற்கு. மிகவும் சிறப்பாக வடிவமைத்திருக்கிறீர்கள். நட்புக் கவிதை ஆர்பாட்டமில்லாத அழகான கவிதை. வாழ்த்துகள்.
அருமை வாழ்த்துக்கள்
http://tamilparks.50webs.com
Good One
Ena pathi ilanu ninaikurean
Ella kavithaiyum nala iruku :)
//Good One
Ena pathi ilanu ninaikurean
Ella kavithaiyum nala iruku :)//
YOU ARE 100% RIGHT... IT IS NOT ABOUT YOU...ANYWAYS THNX FOR YOUR COMMENT...
Post a Comment