Tuesday, June 12, 2012

மறக்கமுடியா உன் இன்ப நினைவுகளோடு…


நான் விழிக்கும் அதிகாலைகளில்
என்னோடு நீயும் விழிப்பாய்
நான் சமைக்கும் பொழுதுகளில்
என்னோடு நீயும் சமைப்பாய்

நான் அலுவலகம் புறப்படும் அவசரத்திலேயிருக்க
நான் குளித்துவிட்டு வருமுன்
எனக்காக என்னுடை தேய்த்து வைப்பாய்
என்னுடைக்கேற்ற அலங்கார பொருட்கள்
என் மதிய உணவு, கைப்பை முதலெடுத்து வைப்பாய்

நீ பணிக்கு கிளம்பும் அவசரத்திலும்
என்னை பேருந்து நிலையத்தில் விட்டுவிட்டு
அதனால் தொடர்ந்த உன் அண்ணனின்
திட்டினை அலட்சியப்படுத்தினாய்

மதிய உணவு வேளையில் நீ பாசமாய்
எடுத்து வைத்த வெஜிடபிள் சாலட்டையும்
புதுவிதமாய் செய்த கோவக்காய் வறுவலையும்
நான் சாப்பிட்டேனா என்றறிய அழைப்பாய்

மாலையில் அலுவலகம் விட்டு வரும்பொழுது
பேருந்து நிறுத்தத்தில் எனக்காக காத்திருந்து
வீட்டிற்கு போவதற்குள் எனக்கு பசிக்குமென்று
எனக்கு பிடித்த பழச்சாறு வாங்கி தந்தாய்

இரவு உண‌வு என்னோடு சமைத்து
துணிம‌ணிக‌ள் துவைத்து உல‌ர்த்த‌ உதவினாய்
இர‌வு தூங்கும் முன் பணிச்சுமையால்
க‌ளைத்திருந்த‌ என‌க்கு தலைக்கோதி
கால் பிடித்து, தைலம் தேய்த்து உன்
க‌ர‌த்தில், உன் அணைப்பில் தூங்க வைப்பாய்

என்னை ஒரு குழந்தையாக பாவித்து
என‌க்கு தாயாக நீ இருப்பாய்
இவைய‌ணைத்தும் நான் கேட்காமலே
எனக்கு நீ தந்தாயன்று….
ஆனால் நான் மன்றாடி கேட்டும்
என்னை மறக்க துணிந்தாயின்று…

என் மேல் உன் அண்ண‌ன் சொன்ன
அவ‌தூறுகளை நூறு சதவிகிதம் அவதூறெனத்தெரிந்தும்
எப்படி வெறுக்கமுடிந்ததுன்னாலென்னை?
மறக்கமுடியா உன் இன்ப நினைவுகளோடு…

9 comments:

rishi said...

உணர்ச்சிக் குவியலாய்
உந்தன் கவிதை....
என்னென்னவோ சொல்லி மனதினை பிசைகின்றதே.....

நல்ல கவிதை. வாழ்த்துகள்.....

சகபயணி
இரவீந்திரன்

Natchathraa said...

வாழ்த்துகளுக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றிகள் இரவீந்திரன்...

பூங்குழலி said...

ஏதோ ஏன் மனத்தையும் பிசைகிறது இந்த கவிதையில் ...கவிதை அற்புதம்

Natchathraa said...

உணர்ச்சிமிக்க பின்னூட்டத்திற்கு நன்றி அக்கா....:)

புதியவன் said...

//என்னை ஒரு குழந்தையாக பாவித்து
என‌க்கு தாயாக நீ இருப்பாய்
இவைய‌ணைத்தும் நான் கேட்காமலே
எனக்கு நீ தந்தாயன்று….
ஆனால் நான் மன்றாடி கேட்டும்
என்னை மறக்க துணிந்தாயின்று…//

உணர்வப் பூர்வமான வரிகள் அருமை...

Unknown said...

ஆனால் நான் மன்றாடி கேட்டும்
என்னை மறக்க துணிந்தாயின்று...

This is very painful, really...! But, this is just not the end of everything and let you have a new beginning soon! "There are many good fish in the ocean" - passing on this adage, once given to me by a close friend of mine when I had a similar ordeal! Cheer up!!!

Natchathraa said...

Thanks for ur comment and comfort akka...

சத்ரியன் said...

நெடுநாட்களுக்குப் பின் வலையில் எழுதவந்திருக்கீங்க. வலி நிரம்பிய கவிதையுடன்.

Natchathraa said...

சத்ரியன்... பதிவிட்ட உடன் பின்னூட்டம் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி....

இந்த பதிவு 5 வருடங்களுக்கு முன் எழுதியது..

இது மீள் பதிவு.. வலிகள் வடுக்களாக மாறி பலக்காலம் ஆச்சு... :)