Thursday, January 22, 2009

நீ மட்டுமே...என் நினைவுகளில்...

நாள் முழுதும் கழிகிறது
உன்னைப்பற்றிய நினைவுகளால்
மட்டும்!!
பனிக்காற்றின் குளிர்ச்சியில்
இளங்காலை வெப்பத்தில்
வானொலியின் காதல் பாடலில்
அவசரச் சமையலில்
மின்னஞ்சல் வாசிக்கையில்
குறுந்தகவல் சத்தத்தில்
மதிய உணவு நேரத்தில்
ப‌ணிமுடித்துக் கிள‌ம்புகையில்
பேருந்து ப‌ய‌ண‌த்தில்
நட்சத்திரங்களை,நிலவை,வானை ரசிக்கையில்
போர்வையின் மென்மையில்
என் க‌ன‌வில்
என
மறக்க நினைத்தும்
முடியாமல்
என் வாழ்வின்
எல்லாக் கணங்களிலும்
உன்னையே யோசித்தபடி இருக்கையில்
உன் நினைவகற்றி வாழ
ஒரு ம‌ணித்துளிக்கூட‌
‌முடிவ‌தில்லையே என்னுயிரே...

35 comments:

தேவன் மாயம் said...

மறக்க நினைத்தும்
முடியாமல்
என் வாழ்வின்
எல்லாக் கணங்களிலும்
உன்னையே யோசித்தபடி இருக்கையில்
உன் நினைவகற்றி வாழ
ஒரு ம‌ணித்துளிக்கூட‌
‌முடிவ‌தில்லையே என்///

நட்சத்ரா!!
அருமையான
கவிதை!!

ரசித்தேன் மேலுள்ள வரிகளை!!
என் புதிய பதிவிற்கு கருத்துரை தருக.

தேவா...

புதியவன் said...

//நீ மட்டுமே...என் நினைவுகளில்...//

தலைப்பே ஒரு கவிதை மாதிரி இருக்கிறது...

புதியவன் said...

//வானொலியின் காதல் பாடலில்
அவசரச் சமையலில்
மின்னஞ்சல் வாசிக்கையில்
குறுந்தகவல் சத்தத்தில்//

அருமை... ரசித்தேன் இந்த வரிகளை...

புதியவன் said...

//போர்வையின் மென்மையில்
என் க‌ன‌வில்
என
மறக்க நினைத்தும்
முடியாமல்
என் வாழ்வின்
எல்லாக் கணங்களிலும்
உன்னையே யோசித்தபடி இருக்கையில்
உன் நினைவகற்றி வாழ
ஒரு ம‌ணித்துளிக்கூட‌
‌முடிவ‌தில்லையே என்னுயிரே...//

மிக அழகு...கவிதை முழுதும் அழகு...
முடித்திருக்கும் விதமும் வெகு அழகு...
தொடருங்கள் உங்கள் கவிப் பயணத்தை...வாழ்த்துக்கள்...

Natchathraa said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தேவா.....

Natchathraa said...

//தலைப்பே ஒரு கவிதை மாதிரி இருக்கிறது...//

எல்லாம் உங்ககிட்ட கத்துகிட்டது தானே புதியவன்.... ;-)

Natchathraa said...

//அருமை... ரசித்தேன் இந்த வரிகளை...//

ரசனைக்கு நன்றி...

Natchathraa said...

//மிக அழகு...கவிதை முழுதும் அழகு...
முடித்திருக்கும் விதமும் வெகு அழகு...
தொடருங்கள் உங்கள் கவிப் பயணத்தை...வாழ்த்துக்கள்...//

என் சகோதரனின் துணையுடன் தான் என்னால் இப்படி முடிக்க முடிந்தது...
வாழ்த்துகளுக்கு நன்றி புதியவன்...

Divya said...

உருக்கமான.......உணர்வுபூர்வமான கவிதை நட்சத்திரா:))

மேவி... said...

nalla irukku kavithai.....

kuma36 said...

//மென்மையில் என் க‌ன‌வில் எனமறக்க நினைத்தும் முடியாமல்என் வாழ்வின் எல்லாக் கணங்களிலும்உன்னையே யோசித்தபடி இருக்கையில்///

அருமையான கவிதைகள்

மனமிருந்தால் மார்க்கமுணடான போதும்
உன்னை மறக்க மனமில்லாமல் தான்
கனவுகளில் ஊஞ்சல் கட்டி
நினைவுகளில் ஊஞ்சலாடுகின்றேன்...

Natchathraa said...

//உருக்கமான.......உணர்வுபூர்வமான கவிதை நட்சத்திரா:))//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திவ்யா... என்னயிருந்தாலும் உங்க அளவுக்கு வரமுடியாதுமா....

Natchathraa said...

//அருமையான கவிதைகள்//

நன்றி கலை...

//மனமிருந்தால் மார்க்கமுணடான போதும்
உன்னை மறக்க மனமில்லாமல் தான்
கனவுகளில் ஊஞ்சல் கட்டி
நினைவுகளில் ஊஞ்சலாடுகின்றேன்...//

ரொம்ப அழகாயிருக்கு....

மண்சட்டி said...

அன்பின் தங்கை நட்சத்திரா.. அருமையான கவிதை...
எந்த எழுத்துக்களை பாராட்ட
எந்த வார்த்தைகளை பாராட்ட
எந்த வரிகளை தனியே பாராட்ட..
எல்லா எழுத்துக்களிலும் உயிரின்
உணர்வினை உணர்ந்தேன்.. ..
பூமாலையில் எல்லா பூவும் ஒன்றுதான்..
உன் பாமாலையில்.. எல்லாமே.. ஒன்று தான்...
வாழ்த்துகிறேன்... தங்கையே...

அன்புடன் இளங்கோவன்..

மண்சட்டி said...

அன்பின் தங்கை
அருமையான கவிதை..
ஒவ்வொரு எழுத்திலும் உயிர் ஓடிகொண்டிருக்கையில்... ..எதனை தனியே எடுத்து நான் பாராட்டுவேன்..


வாழ்த்துக்கள்..தங்கை

அன்புடன் இளங்கோவன்.

ராம்.CM said...

தாங்கள் கவிதை மிகவும் அருமையாக இருந்தது. எனக்கு மிகவும் பிடித்திருந்தது. வாழ்த்துக்கள்..!

காரூரன் said...

நட்சத்ரா,

வார்த்தையில் கவிதை வரிகளா அல்லது வலிகளா?
வானத்து நட்சத்திரத்தில் உங்கள் நட்சத்திரம்
கையில் எட்ட வாழ்த்துக்கள்

தேவன் மாயம் said...

நல்ல கவிதை!ஏன் வலைக்கு வரவில்லை
10.30 மணிக்கு வலைச்சரம் வரவும்
தேவா.///

Natchathraa said...

// MayVee said...
nalla irukku kavithai.....//

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி MayVee....

Natchathraa said...

//அன்பின் தங்கை
அருமையான கவிதை..
ஒவ்வொரு எழுத்திலும் உயிர் ஓடிகொண்டிருக்கையில்... ..எதனை தனியே எடுத்து நான் பாராட்டுவேன்..


வாழ்த்துக்கள்..தங்கை//

தங்களின் முதல் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி இளங்கோ அண்ணா....

Natchathraa said...

// ராம்.CM said...
தாங்கள் கவிதை மிகவும் அருமையாக இருந்தது. எனக்கு மிகவும் பிடித்திருந்தது. வாழ்த்துக்கள்..!//

என் கவிதை உங்களுக்கு பிடித்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி...
வாழ்த்துகளுக்கு நன்றி ராம்....

Natchathraa said...

//வார்த்தையில் கவிதை வரிகளா அல்லது வலிகளா?
வானத்து நட்சத்திரத்தில் உங்கள் நட்சத்திரம்
கையில் எட்ட வாழ்த்துக்கள்//

சுகமான வலிகள்...:-)
தங்களின் வருகைக்கும் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி....

Divya said...

\\Blogger Natchathraa said...

//உருக்கமான.......உணர்வுபூர்வமான கவிதை நட்சத்திரா:))//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திவ்யா... என்னயிருந்தாலும் உங்க அளவுக்கு வரமுடியாதுமா....\\


kindala???

y no new kavithais in your blog??

Waiting for your next post:))

Technical advisors said...

hi ur blog is very interesting

நட்புடன் ஜமால் said...

சீக்கிரம் கத்துக்கிட்டு வாங்க

கவிதைகளை ...

Natchathraa said...

//சீக்கிரம் கத்துக்கிட்டு வாங்க

கவிதைகளை ...//

Ungala madiri periyava aasirvatham irundha nichayam seekiram kathukalam... :-)

ஆதவா said...

காதல் என்று ஒற்றை வார்த்தையால் சொல்லிவிடுவார்கள்.. ஆனால் அனுபவிப்பவர்களுக்குத்தான் தெரியும் அது எத்தனை கஷ்டமான வேலை என்றூ!!! நினைவுகள் எல்லாம் புலம்பும், ஒவ்வொரு நொடியும்....

ஆதவா said...


நட்சத்திரங்களை,நிலவை,வானை ரசிக்கையில்
போர்வையின் மென்மையில்




வாழ்க்கை நம்மை ஒவ்வொன்றாய் ரசிக்க வைக்கிறது.... கூடவே மனதிற்குப் பிடித்தவர்களையும் ரசிக்க வைக்கிறது!!!!

ஆதவா said...

இயல்பாக இருக்கிறது சகோதரி.. கவிதையின் போக்கும், அது செல்லும் பாதையும், சொல்லும் கருத்தும் அழகாக இருக்கிறது.

ஏன் தொடர்ந்து இன்னும் எழுதாமல் இருக்கிறீர்கள்??

Natchathraa said...

// ஆதவா said...
காதல் என்று ஒற்றை வார்த்தையால் சொல்லிவிடுவார்கள்.. ஆனால் அனுபவிப்பவர்களுக்குத்தான் தெரியும் அது எத்தனை கஷ்டமான வேலை என்றூ!!! நினைவுகள் எல்லாம் புலம்பும், ஒவ்வொரு நொடியும்....//

முதல் வருகைக்கும் தருகைக்கும் நன்றி ஆதவா...

உண்மைதான் ஆதவா... காதல் படுத்தும் பாடு பெரும் பாடு தான்...அவ்வளோ சுலபமான ஒன்று இல்லை... :)

Natchathraa said...

//இயல்பாக இருக்கிறது சகோதரி.. கவிதையின் போக்கும், அது செல்லும் பாதையும், சொல்லும் கருத்தும் அழகாக இருக்கிறது.

ஏன் தொடர்ந்து இன்னும் எழுதாமல் இருக்கிறீர்கள்??//

வாழ்த்துகளுக்கு நன்றி சகோதரரே...
நேரமின்மைதான் காரணம்...அதிலும் நான் இப்போதான் எழுத ஆரம்பித்திருக்கிறேன்... கத்துக்குட்டி... :-)

Ashok Kumar SN said...

unarvu malai polikiradhu

ovvaru thuliyulum ungal mugam therigiradhu

Unknown said...

After reading this poem .. my mind eloped to writer sujatha's novel ..
" pirivom santhippom "...
in that story mr.sujatha would describe the lover boy's plight as ..."Mathumitha -val mugaththai kazhuvi.. Mathumithava-vil pal thulakkai, Matumitha-vil kuzhithu,
Mathumitha- vil mugam pathu..Mathumithavil thalai seevi..."

How beauty it is to read a same thought through two different versions..

Nice work..continue writing..

regards
g.sivakumar

Gold Bala said...

//பேருந்து ப‌ய‌ண‌த்தில்
நட்சத்திரங்களை,நிலவை,வானை ரசிக்கையில்
போர்வையின் மென்மையில்
என் க‌ன‌வில்..//

Nalla irukke.,.Hmm...
Yaar antha Ninavugalin urimaiyaalan endru thaan theriyavillai..[:)]

கோகுல் said...

//அவசரச் சமையலில்
மின்னஞ்சல் வாசிக்கையில்
குறுந்தகவல் சத்தத்தில்
மதிய உணவு நேரத்தில்
ப‌ணிமுடித்துக் கிள‌ம்புகையில்
பேருந்து ப‌ய‌ண‌த்தில்//

இந்த வரிகள் ரொம்ப நல்லாயிருக்குதுங்க நட்சத்திரா!

ரசித்துப் படித்த நல்ல கவிதை!

--
ப்ரியத்துடன்,
கோகுல்